ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
X

ஈவிகேஎஸ் இளங்கோவன்.

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (வயது 76) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னை கிண்டி மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு, உடல்நிலையில் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..