முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்
X

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் அமைச்சர்கள் உள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.11) அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக கழக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் குறிஞ்சி என்.சிவகுமார், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags

Next Story
Similar Posts
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
போகிப் பண்டிகை: காற்றின் தரத்தை பாதுக்காக்க ஈரோடு ஆட்சியர் வேண்டுகோள்!
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!
கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் கோலாகலமான பொங்கல் திருவிழா..!
எடப்பாடி பழனிசாமி உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை..!  5-வது நாளாக தொடரும் விசாரணை..!
பேரூராட்சிக்கு மாற்றம் - மக்கள் எதிர்ப்பில் கொந்தளிக்கும் போராட்டக் குரல்..!
வெள்ளகோவிலை தாலுகாவாக அறிவிக்க முன்மொழிவு..! பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அழைப்பு
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பழங்குடியின மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் மாலை நேர படிப்பகங்கள்
முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டி: காங்கிரஸ் கமிட்டி அறிக்கை
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!