ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: இன்று ஒரேநாளில் 56 பேர் தாக்கல்!
திமுக வேட்பாளர் சந்திரகுமார் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்த போது எடுத்த படம்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஜன.7ம் தேதி அறிவிக்கப்பட்டு 10ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்பு தாக்கல் செய்ய இன்று (ஜன.17) கடைசி நாள் என்பதால் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சீதாலட்சுமியும் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை 20ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu