ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் 14 நிர்வாகிகள் கொண்ட பாஜக குழு அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் 14 நிர்வாகிகள் கொண்ட பாஜக குழு அறிவிப்பு
X

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிக்காக 14 நிர்வாகிகள் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிக்காக 14 நிர்வாகிகள் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், இத்தேர்தல் பணிகளை கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் பாஜக குழு அமைத்துள்ளது. இக்குழுவில், ஈரோடு தெற்கு மாவட்ட வேதானந்தம், பாஜக தலைவர் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செந்தில், சிவகாமி மகேஸ்வரன், மகளிரணித் தலைவர் புனிதம் ஐயப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் ஜி.விவேகானந்தன், விஸ்வா பாலாஜி, எஸ்.சி. அணி மாநில பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, ஓபிசி அணி மாநில துணைத்தலைவர்கள் தங்கராஜ், ஆற்றல் அசோக்குமார், ஐடி பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவர் ரஞ்சித் ஆகிய 14 பேர் மாநிலக் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil