கோபிசெட்டிபாளையம்: மளிகை கடையில் குட்கா விற்ற பெண் கைது

கோபிசெட்டிபாளையம்: மளிகை கடையில் குட்கா விற்ற பெண் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கள்ளிப்பட்டி அருகே மளிகை கடையில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள வரப்பள்ளம் இந்திராநகரை சேர்ந்தவர் அருள்ராணி (65). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அருள்ராணி தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்து விற்பனை செய்து வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அந்த பகுதியில் ரோந்து கண்காணிப்பு பணியில் சென்ற போலீசார் குட்கா விற்ற அருள்ராணியை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 பாக்கெட்டுகள் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!