ஈரோடு மாவட்ட இன்றைய (20.06.2022) முக்கிய செய்திகள்
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:-
* ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் 95.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 13 இடத்துக்கு ஈரோடு மாவட்டம் பின்தங்கியுள்ளது.இதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.11 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 17வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
* ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கவுந்தப்பாடியில் இன்று முன்னாாள்அமைச்சர் கே. சி.கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது. அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தற்போது மாவட்டத்தில் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
* ஈரோடு மாநகர்:- ஈரோடு மாநகராட்சியில் புதிய சொத்து வரி உயர்வு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. முதல் அரையாண்டிற்கான புதிய வரியை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும், 2-ம் அரையாண்டிற்கான வரியை வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆண்டு(2023) மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் செலுத்தலாம். புதிய வரி விதிப்புக்கு மக்கள், மாநகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
* கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் ஹவுஸ் சார்ஜனாக உள்ள தனது மகன் அஸ்வினை மருத்துவம் பார்க்குமாறு கூறிவிட்டு, ஜாலியாக ஒகேனக்கலுக்கு சென்ற தலைமை மருத்துவர் தினகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* பவானி: பவானியில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
* அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வயிற்று வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்தார்.
* கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பழைய வள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. கார் டிரைவரான இவர் அண்ணா பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu