ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரசேகர் கலந்து கொண்டு பேசுகையில், இந்த கூட்டத்தில் டாஸ்மார்க் பார் உரிமையாளர்களிடம் மாதம்தோறும் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஆவணங்களை காண்பித்து டாஸ்மாக் பாருக்கு உரிமம் கொண்டாடும். நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் டாஸ்மாக் பார்களால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதால் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் டாஸ்மாக் பார்களுக்கு மறு ஏலம் நடத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் செல்வன், மோகன், கணேசன், மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business