ஈரோட்டில் நாளை மறுநாள் (செப்.29) செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா

ஈரோட்டில் நாளை மறுநாள் (செப்.29) செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா
X

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவர் நந்தகோபால், செயலாளர் ஆசைத்தம்பி.

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நாளை மறுநாள் (செப்டம்பர் 29) பெருந்துறை துடுப்பதியில் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நாளை மறுநாள் (செப்டம்பர் 29) பெருந்துறை துடுப்பதியில் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நாளை மறுநாள் (செப்டம்பர் 29) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிக்கு பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

விழாவிற்கு, சங்க மாநில புரவலரும், மாவட்ட கௌரவ ஆலோசகருமான கே.கே.பாலுசாமி தலைமை தாங்குகிறார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.நந்தகோபால் வரவேற்று பேசுகிறார். மாவட்டச் செயலாளர் எம்.ஆசைத்தம்பி முன்னிலை வகிக்கிறார். மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறுகிறார்.

விழாவில், ஜெ.சுத்தானந்தன், ஆர்.ஏ.என்.முத்துசாமி, சுதந்திரப் போராட்டத்தில் கொடி காத்த தியாகி குமரன், முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை ஆகியோரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி பேசுகிறார். மேலும், விழாவில் சமுதாய சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா, 17ம் நூற்றாண்டில் ஈரோட்டை ஆண்ட மன்னர் சந்திரமதி முதலியார் உருவப்படம் வெளியிட்டு விழா, சங்கத்தின் 41ம் ஆண்டு விழா, போன்ற ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது.

முன்னதாக, காலை 10 மணிக்கு சிலம்பு, துடும்பு ஆட்டங்கள், வள்ளி கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மாவட்ட தலைவர் என்.நந்தகோபால், செயலாளர் எம்.ஆசைத்தம்பி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!