ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக ஈரோட்டில் 42.20 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக ஈரோட்டில் 42.20 மி.மீ மழை பதிவு
X
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக ஈரோட்டில் 42.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக ஈரோட்டில் 42.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே அனைத்து பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. இந்தநிலையில் நேற்று திடீரென மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.

ஈரோட்டில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு நகரின் பல பகுதிகளிலும் பன்னீர் தெளித்ததுபோல மழைத்துளி விழத்தொடங்கியது. அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான தூறல் இருந்தது. பின்னர், 3 மணிக்கு தூறல் சாரலாக மாறியது. மாலை 4 மணிக்கு மேல் சற்று பலத்த மழை பெய்தது. சுமார் 40 நிமிடங்கள் இந்த மழை நீடித்தது.


இதனால், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் நேற்று மாலை முதல் இரவு வரை குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் பின்னர் இரவு 9 மணிக்கு பலத்த மழை கொட்டியது. இதனால், ஈரோட்டின் அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல், அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணியளவில் சாரலாக தொடங்கிய மழை திடீரென பலத்த மழையாக வேகம் எடுத்தது. சுமார் அரை மணி நேரம் நிற்காமல் பெய்தது. மழை பெய்த போது பலத்த காற்றும் வீசியதால் மேட்டூர்-பவானி ரோட்டில் ஊமாரெட்டியூர் பிரிவு அருகே உள்ள ராட்சத புளியமரம் ரோட்டில் விழுந்தது.

யாரும் அப்போது அந்த வழியாக செல்லாததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால், மேட்டூர்-பவானி ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், அத்தாணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 3.20 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை சாரல் மழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது.

ஆப்பக்கூடல், கீழ்வாணி, அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மாலை 5.15 மணி வரை சாரல் மழை பெய்தது. மீண்டும் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

சத்தியமங்கலத்தில் மாலை 5.15 மணி முதல் 5.45 வரை சாரல் மழை பெய்தது. இதுபோல சத்தியமங்கலம் அருகே உள்ள ரங்கசமுத்திரம், காந்திநகர், கோணமூலை ஆகிய பகுதிகளிலும் மாலை 4 மணி அளவில் லேசான மழை பெய்தது.

அதேபோல், புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 30 நிமிடம் நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

கோபி, கரட்டூர், நாயக்கன் காடு, பாரியூர், நஞ்சகவுண்டன்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் பள்ளி முடிந்து செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மார்ச் 12ம் தேதி) புதன்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 42.20 மி.மீ,

மொடக்குறிச்சி - 29 மி.மீ,

கொடுமுடி - 6 மி.மீ,

பெருந்துறை - 25 மி.மீ,

சென்னிமலை - 18.40 மி.மீ,

பவானி - 11.80 மி.மீ,

கவுந்தப்பாடி - 15.60 மி.மீ,

அம்மாபேட்டை - 15.40 மி.மீ,

வரட்டுப்பள்ளம் அணை - 2.20 மி.மீ,

கோபிசெட்டிபாளையம் - 19.20 மி.மீ,

எலந்தகுட்டைமேடு - 24.40 மி.மீ,

கொடிவேரி அணை - 19.20 மி.மீ,

குண்டேரிப்பள்ளம் - 17 மி.மீ,

நம்பியூர் - 25 மி.மீ,

சத்தியமங்கலம் - 22 மி.மீ,

பவானிசாகர் - 10.60 மி.மீ,

மாவட்டத்தில் மொத்தமாக 303 மி.மீ ஆகவும், சராசரியாக 17.82 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Next Story