ஈரோடு: ராட்டைசுற்றிபாளையம் பைரவர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ராட்டைசுற்றிபாளையம் பைரவர் கோவில்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே உள்ள ராட்டை சுற்றிபாளையத்தில் 39 அடி உயர கால பைரவர் சிலையை நுழைவு வாயிலாக கொண்ட பைரவர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மார்ச்.13 (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. முன்னதாக பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அவல்பூந்துறை சிவன் கோவிலில் புனிதநீர் குடங்களுக்கும், கும்பாபிஷேக கலச தீர்த்த குடத்துக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் தீர்த்த குடங்கள் அலங்கரிக்கப் பட்ட யானை மற்றும் பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் கால யாக பூஜையும், 3ம் கால யாக பூஜையும், இரவில் வள்ளி கும்மி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதனை தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை அவல்பூந்துறை ஸ்வர்ண பைரவர் பீட விஜய் சுவாமிஜி முன்னிலையில் அவல்பூந்துறை செல்வரத்தினம் சிவாச்சாரியார் நடத்தி வைக்கிறார்.
நட்சத்திர கலச தீர்த்தாபிஷேகம், பைரவ அலங்கார ஆரத்தி அர்ச்சனைக்கு முன்பதிவு செய்து கும்பாபிஷேக பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த கும்பாபிஷேகத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu