ரங்கம்பாளையம் சித்தி விநாயகர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
ரங்கம்பாளையம் சித்தி விநாயகர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் திருக்கோயிலில் தை 13ம் நாள் சஷ்டி திதியும், ரேவதி விண்மீனும் அமிர்தயோகமும் கூடிய சிவயோக சிவமங்கல வேலையில் அருள்மிகு சித்தி விநாயகர் மூலாலய திருக்குட நன்னீராட்டு பேரொளி வழிபாடு மூலம் காலை ஒன்பது மணிக்கு வேத வித்தகர் தமிழ் மந்திரங்கள் ஓதி, திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இதற்காக கடந்த தை பதினொன்னாம் நாள் காவிரிக்குச் சென்று புனித நீர் எடுத்துவரப்பட்டது, அது சமயம் பெண்கள் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து வந்தனர். தை 12 ம் தேதி மங்கல இசை, ஐங்கரன் வேள்வி, திருமகள் வழிபாடு, அனுமதி பெறுதல், மண் எடுத்தல், காப்பணிதல் வழிபாடுகள் முதற்கால யாக வேள்வி" தொடர்ந்து 108 மூலிகை, கனியமுதுகள் திரவியங்களைக் கொண்டு வேள்வி வழிபாடு, மூலத் திருமேனிக்கு எந்திரம் வைத்து எண் வகை மருந்து சாற்றுதல் போன்றவை நடைபெற்றது.
இன்று காலை நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு விழாவில் அப்ப பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அப்போது அவர்கள் மேல் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதை எடுத்து வந்த அனைத்து பக்தர்களுக்கும் காலையில் அனைத்து பக்தர்களும் காசி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகி முத்து, 56 ஆவது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் விழா ஏற்பாட்டு செய்திருந்தனர். திருக்கோயில் நிர்வாகிகள் வடிவேல், பழனிச்சாமி, செல்வராஜ், சந்திரசேகர்,மோகன்ராஜ், மணிகண்டன், வெங்கடேஷ், சுரேஷ், யுவராஜ், பிரபாகரன், காசி திருமண மண்டபம் நிறுவனர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu