ஈரோடு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு
X

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஈரோடு மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் விழா புதன்கிழமை (28-ம் தேதி) இன்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் (பொறுப்பு) ஜெயசீலன் வரவேற்று பேசினார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.


ஈரோடு மாவட்டம் ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த பி.யுவரேகா, ஜே.சதாசிவம், மா.மகேஸ்வரி, ஆ.செல்லபொன்னி, இரா.ரமேஷ்குமார், க.விஜயகுமார், எஸ்.எல்.வேலுசாமி, தனலட்சுமி அருணாச்சலம், ஆர்.நளினா ஆகிய 9 பேருக்கும், அதிமுகவைச் சேர்ந்த ஆ.கோ.பழனிச்சாமி, பி.அனுராதா ஆகிய 2 பேருக்கும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தை சேர்ந்த டி.சிவகாமி என 12 பேருக்கும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குநர்/ கூடுதல் ஆட்சியர் நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.


இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி), முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.கந்தசாமி , கோபி நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கஸ்தூரி, மாவட்ட ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) எம். காதர் மஸ்தான், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்குப் பிரிவு) பூங்கொடி மற்றும் ஈரோடு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!