ஈரோடு மாவட்டத்தில் 12,330 குடும்பத்தினர் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கவில்லை
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 330 ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்படாமல் உள்ளதாக, மாவட்ட வழங்கல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அன்மையில் கொண்டு வந்தது. இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் மூலம் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். இந்தியாவில் எங்கு இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வசதியே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்று கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில், 1174 ரேஷன் கடைகளும், 44 நடமாடும் ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 6.72 லட்சம் அரிசி ரேஷன் கார்டுகள், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட ரேஷன் கார்டுகள் 67,826, காவலர் கார்டுகள் 1,567, சர்க்கரை கார்டுகள் 18,395, முதியோர் அரிசி கார்டு கள் 5,026, அன்னபூர்ணா அரிசி கார்டுகள் 25, எந்த பொருளும் வேண்டாம் என்ற கார்டுகள் 1,303 என மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 66 ஆயிரத்து 388 கார்டுகள் உள்ளன.
இந்த கார்டுகள் மூலம் 20 லட்சத்து 84 ஆயிரத்து 263குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறுகின்றனர். ஒவ்வொரு ரேஷன் கார்டு டன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 20 லட்சத்து 71 ஆயிரத்து 933 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தங்களது ஆதார் எண்ணை ரேஷன் கார்டு டன் இணைத்துள்ளனர். 12 ஆயிரத்து 330 உறுப்பினர்கள் தங்களது குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைத்ததன் மூலம் சில ஆயிரம் போலி கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் வைத்திருந்தது. ஒரே நபர் அவரது குடும்ப உறவுகளின் வேறு கார்டுகளில் இடம் பெற்றது போன்றவை கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஆதார் கார்டில் உள்ள முகவரி, பெயரில் உள்ள எழுத்துகள், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதில் உள்ள குறைபாடு போன்ற காரணத்தால், 12 ஆயிரத்து 330 பேர் இன்னும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்காமல் உள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அரசு அறிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu