அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
X

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முடிந்து, மாதிரி வாக்குப்பதிவு நடந்ததை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 237 வாக்குச்சாவடி மையங்களில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த வாக்குப்பதிவிற்கு 480 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

அதனை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி பெங்களூரு பெல் நிறுவனத்தின் மூலம் கடந்த ஜன.6ம் தேதி முதல் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி முடிவுற்ற பின், இந்திய தேர்தல் ஆணையம் 5 சதவீதம் மாதிரி வாக்குப்பதிவு நடத்திட உத்தரவிட்டுள்ளது.

இப்பணி நேற்று முடிவடைவதைத் தொடர்ந்து, நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார். மேலும் மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், 19 இயந்திரங்கள் பயிற்சி நடத்துவதற்காக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த ஆய்வின்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!