சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
X

சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பார்வையாளர்கள் ராஜீவ் ரஞ்சன் மீனா, ராம் கிருஷ்ண ஸ்வரன்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

சித்தோட்டில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்

சித்தோட்டில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில், ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ராஜீவ் ரஞ்சன் மீனா (பொது), ராம் கிருஷ்ண ஸ்வரன்கர் (காவல்) ஆகியோர் வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் தேர்தல் 2024-க்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் முதல்கட்டமாக நாளை மறுநாள் (19ம் தேதி) தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ராஜீவ் ரஞ்சன் மீனா (பொது) மற்றும் ராம் கிருஷ்ண ஸ்வரன்கர் (காவல்) ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் இடங்கள், வாக்கு பெட்டிகள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, வாகனம் நிறுத்துமிடம், தபால் வாக்குகள் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!