/* */

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் நடந்த குற்றசம்பவங்கள் தொடர்பான கிரைம் செய்திகள் விவரம்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
X

பைல் படம்

ஈரோட்டில் கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பெண் பலி; லாரியின் கண்ணாடி உடைப்பு:- தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம் இவரது மகள் அனிதா. இவர் சென்னையில் தற்காலிக ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக ஈரோடு திண்டல் பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் புதன்கிழமை அன்று சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் உறவினரான தனுஷ், சிறுவன் ரியாஸ் ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரப்பன்பாளையம் பிரிவு இடத்தில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் இடதுபக்க சக்கரம் அனிதாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பயணித்த தனுஷ், ரியாஸ் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அனிதாவின் உறவினர்கள் லாரியை முற்றுகையிட்டு லாரியின் கண்ணாடியை உடைத்தனர். இதனைக்கண்ட லாரி டிரைவர் அங்கு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி அருகே பிரபலமாக அரசு பேருந்தின் கண்ணாடியை உடைக்க திட்டம்; 3 பேர் கைது:- கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் கொண்ட கும்பல் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். விசாரணையில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22) , சாமுண்டி (27) , கருணா என்கிற கருணாமூர்த்தி (24) ஆகிய மூன்று பேரும் பிரபலமாக அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தல் பிரபலமாகி விடலாம் என திட்டம் திட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே வேட்டை தடுப்பு காவலர்களை யானை தாக்கியதில் இருவர் படுகாயம்:- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டகரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தண்ணீர் குட்டை பகுதியில் சுரேஷ் (30) கணேசன் (27) ஆகிய இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை இருவரையும் தாக்கியுள்ளது. இதனையடுத்து வன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து அங்கு இருவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொடக்குறிச்சியில் போதையில் மது என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தவர் பலி:- மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி (50). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விவசாயத்திற்க்காக வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி வைத்திருந்தவர் கடந்த 4ம் தேதி இரவு மதுபோதையில் மது என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதனையடுத்து வயிற்று வலியால் அவதிப்பட்டவரை குடும்பத்தினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர். பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதனைத்தொடர்ந்து கடந்த 8-ம் தேதி மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுரேஷ் அளித்த புகாரில் பேரில் மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகிரி அருகே மளிகைக்கடையில் புகையிலை பொருட்களை விற்றவர் மீது வழக்கு:-சிவகிரி அருகே உள்ள காகம் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக சிவகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள மளிகைக்கடையில் சோதனை செய்தனர். சோதனையில் 6 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் கடையின் உரிமையாளரான சாந்தகுமார் (37) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை அருகே இருவேறு இடங்களில் மளிகைக்கடையில் புகையிலை விற்ற 3 பேர் மீது வழக்கு:-பெருந்துறை அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவது பெருந்துறை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த நடராஜ் (63) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.2,514 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், துடுப்பதி ஐயப்பன் நகரை சேர்ந்த வடிவேல் என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கி வந்து விற்றது தெரியவந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், பெருந்துறை பாண்டியன் வீதியில் உள்ள மளிகைக் கடையில் புகையிலை பொருட்களை விற்ற அற்புதசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து ரூ.4,612 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 12 Oct 2022 4:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  4. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  5. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  7. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  8. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  10. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!