உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: டிச.24ல் பெருந்துறை வட்டத்தில் ஈரோடு ஆட்சியா் கள ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: டிச.24ல் பெருந்துறை வட்டத்தில் ஈரோடு ஆட்சியா் கள ஆய்வு
X

பெருந்துறை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வரும் டிசம்பர் 24ம் தேதி பெருந்துறை வட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறாா்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வரும் டிசம்பர் 24ம் தேதி பெருந்துறை வட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறாா்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் டிசம்பர் 24ம் தேதி அன்று காலை 9 மணிமுதல் மறுநாள் 25ம் தேதி காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப் படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளார். மேலும், 24ம் தேதி மாலை 4.30 மணிமுதல் 6 மணி வரை பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Similar Posts
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..
கேன்சர்க்கு இனி குட் பை.. புதிய தடுப்பூசி உருவாக்கி உலகையே அதிர வைத்த ரஷ்யா !
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: டிச.24ல் பெருந்துறை வட்டத்தில் ஈரோடு ஆட்சியா் கள ஆய்வு
வயதுக்கு ஏற்ற உப்பு அளவு தெரியுமா? உடலுக்கு முக்கிய அறிவுரை!..
திமுக அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கிறதே என்று வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டே இருக்கிறார்: ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தாக்கு
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!
சுவைக்கும் ஆரோக்கியம்: மூங்கில் குருத்தின் மருத்துவ ரகசியங்கள்!..இது கெடச்சா சாப்டாம மட்டும் இருக்காதீங்க!
ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 8 புதிய அறிவிப்புகள்!
ஆன்க்சிட்டி நோய்க்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும்?
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
ஈரோட்டில் ரூ.1,085 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.284 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
புயல் பாதிப்பால் ஒத்திகை செய்யப்பட்ட அரையாண்டு தேர்வு – சென்னையில் நாளை இருந்து மீண்டும் நடைபெறும்!
7 நாட்கள் கொள்ளு சாப்பிட்டால், தொப்பை கொழுப்பு குறையுமா?..உண்மை என்ன?
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..