கோபிசெட்டிபாளையத்தில் பொதுமக்களிடம் இருந்து 260 கோரிக்கை மனுக்களை பெற்ற ஈரோடு ஆட்சியா்!

கோபிசெட்டிபாளையத்தில் பொதுமக்களிடம் இருந்து 260 கோரிக்கை மனுக்களை பெற்ற ஈரோடு ஆட்சியா்!
X
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடம் இருந்து 260 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடம் இருந்து 260 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மைய கூட்டரங்கில், மாவட்ட ராஜ கோபால் சுன்கரா தலைமையில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்றது..

இக்கூட்டத்தில், பல்வேறு துறைச்சார்ந்த முதன்மை அலுவலர்கள் கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட மருத்துவமனைகள், துறைச் சார்ந்த அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் அரசின் திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் விவாதித்தார்.


தொடர்ந்து, ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் திறனை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 260 மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தமிழ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மரகதமணி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story