பவானி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்

பவானி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
X

டிஎஸ்பி அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி அவர்கள் சிறப்பாக செயல்பட்ட முதல் பரிசு பெற்ற பவானி டிஎஸ்பி  கார்த்திகேயனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறப்பாக பணியாற்றியதற்காக ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் பவானி உள்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன். அவர்களுக்கு கோவையில் மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெற்ற நீதிமன்ற நிலுவையில், இருந்த வழக்குகளில் அதிகப்படியான வழக்குகளை எந்த உட்கோட்டம் அதிக வழக்குகளை முடிகிறதோ அதற்கு பரிசுகள் வழங்கப்படும் என்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, மேற்கு மண்டலத்தில் உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர் ,கோயம்புத்தூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களும் சிறப்பான முறையில் வழக்குகளை முடித்து வைக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், பவானி உட்கோட்டத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளில் அதிகமான வழக்குகளை முடித்து வைக்கப்பட்டனதால் பவானிஉட்கோட்டத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பவானி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு , கோவை மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் சான்றிதழ் வழங்கினார். அப்போது கோவை மண்டல துணை தலைவர் முத்துசாமி உடனிருந்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது