நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 64 மனுக்கள் தள்ளுபடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 64 மனுக்கள் தள்ளுபடி
X

பைல் படம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் வேட்பு மனு பரிசீலனை முடிந்தது 64 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தமிழகம் முழுவதும் ஒரே.கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 28ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 4-ஆம் தேதியான நேற்று மாலை வரை நடைபெற்றது.இதில் ஈரோடு மாவட்டத்தில், திருச்சி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ். அ.ம.மு.க. மககள் நீதி மய்யம், தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சி. வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் உட்பட மொத்தம் 490 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் , புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் போட்டியிட மொத்தம் 517 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 11 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 506 வேட்பாளர்களின் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ள பட்டது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் போட்டியிட 630 வார்டுகளுக்கு 2,294 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 34 மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு 2,260 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆக மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 3,301 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததில் 3,237 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், மொத்தம் 64 மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 7-ந்தேதி மாலை வரை போட்டியில் இருந்து விலகும் வேட்பாளரின் வேட்புமனு வாபஸ் பெறும் நேரத்திற்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலையே உறுதி செய்யப்பட உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!