ஈரோடு மாவட்டத்தில் நாளை 35,619 பேர் குரூப்-2 தேர்வு எழுதவுள்ளனர்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 35,619 பேர் குரூப்-2 தேர்வு எழுதவுள்ளனர்
X

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் குருப்-2, 2 ஏ தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.21) 117 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே 21) 35,619 பேர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வை எழுத உள்ளனர். இதற்காக பள்ளி, கல்லுாரிகளில் மொத்தம் 117 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வாளர்கள் காலை 8:30 மணிக்குள் மையத்திற்கு இருக்க வேண்டும். மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தேர்வு மையங்கள் உள்ள நகர், புறநகர் பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் கல்வித்துறை, வருவாய்துறை, போக்குவரத்துறை, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்வு மையங்களில் பறக்குபடை மூலம் தேர்வாளர்களை கண்காணிக்கவும், அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!