ஈரோடு: துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து பலி

ஈரோடு: துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து  பலி
X

பைல் படம்.

ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு முனிசிபல் சத்திரம் நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). மாநகராட்சி 1-வது மண்டலத்தில் துப்புரவு பணியாளராக கடந்த 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நுரையீரலில் நீர் கோர்த்து நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2 கால்கள் வீக்கமாக இருந்ததால் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் உதவியுடன் வீட்டிற்கு அருகே உள்ள பொது கழிப்பிடத்திற்கு முருகேசன் சென்றார். திரும்பி வரும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்