ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா: இன்று 542 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அசுர வேகத்தில் பரவும் தொற்று காரணமாக பொதுமக்கள் கவலை அடைந்து வருகின்றனர். ஏற்கனவே 2-வது அலை பெரும் பாதிப்பையும், அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தியது பொதுமக்கள் மனதில் மறையாத வடுவாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்திருப்பது மக்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 5 நாட்களாக கொரோனாவுக்கு தினமும் கூடுதலாக 100 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று 5 ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 355 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்த நிலையில் இன்று புதிதாக 542 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 329 ஆக உயர்ந்தது. இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 645 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் இன்று மட்டும் 139 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது 1,970 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.ஈரோடு மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 714 ஆக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu