ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!

ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
X

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ்,  அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக கே.இ.பிரகாஷ் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்னதாக தொகுதியில் உள்ள குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டதற்காக முதல்வருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ், வேட்பாளர் பிரகாஷ், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, தொகுதியின் கள நிலவரம் குறித்து ஸ்டாலின் வேட்பாளர் பிரகாசிடம் கேட்டறிந்தார். பின்னர், அவர் வேட்பாளர் பிரகாசுக்கு வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது