ஈரோடு: பாலியல் புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி

ஈரோடு: பாலியல் புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி
X

பைல் படம்.

பள்ளிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

மாணவ -மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அல்லது தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்தும் தைரியமாக புகார் தெரிவிக்கும் வகையில் அந்தந்த பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதில் மாணவ- மாணவிகள் தங்கள் பிரச்சனையை குறித்து தெரிவிக்கலாம். ஒவ்வொரு புகார் பெட்டிக்கும் இரண்டு சாவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சாவி மாவட்ட கல்வி அலுவலகத்திலும், மற்றொரு சாவி அந்தந்த பள்ளிகளுக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் இருக்கும். புகார் பெட்டி குறிப்பிட்ட நாட்களில் ஒருமுறை திறக்கப்படும். புகார் பெட்டியில் யார் மீதாவது புகார் இருந்தால் அது குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!