ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய ஆட்சியர்!

ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய ஆட்சியர்!
X
ஈரோட்டில் இன்று (மே.12) நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (மே.12) திங்கட்கிழமை நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள், ஜாதிச்சான்றிதழ் மாற்றி தரவேண்டுதல், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 225 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கூட்டத்தில் கூட்டுறவுத்துறை, கோபிச்செட்டிபாளையம் சரகத்தின் சார்பில் தொழில் மேம்பாட்டிற்காக தனிநபர் கடனுதவியாக 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
Similar Posts
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் மே.16ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
ஈரோட்டில் அடுக்குமாடி குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னை சத்யா நகர் பகுதி மக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய ஆட்சியர்!
சித்ரா பவுர்ணமி பண்டிகையால் உழவர் சந்தையில் விற்பனை கோலாகலம்
கோபி பாரியூரில் திருக்கல்யாண பவுர்ணமி விழா பெருமையுடன் துவக்கம்
ராசிபுரத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் பசுமை நினைவுகள்
சென்னிமலை காமாட்சியம்மன் திருவிழா விறுவிறுப்பாக தொடக்கம் – பாலாபிஷேகத்தில் பக்தி பெருக்கம்!
ஈரோடு இன்ஜினியர்கள் அலர்ட்-கட்டுமானத் துறையில் பெரும் சிக்கல்!
டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் ஸ்கேன் முறையில் மது விற்பனை
நாமக்கலில் சிறுவர் கலை முகாம் நிறைவு
ஈரோடு உழவர் சந்தை சூடு பிடித்தது – 32 டன் காய்கறி விற்பனை!
இந்திய ராணுவ வீரர்கள் நலனுக்காக 1,008 பால்குடங்கள் – திருச்செங்கோட்டில் பக்தி ஊர்வலம்!
பெட்ரோல் பங்க் அருகே மர்ம மோதல் – விவசாயியின் கடைசி பயணம்!