அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா: ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா: ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!
X
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ஓடாநிலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 17) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, அறச்சலூர் ஓடாநிலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 17) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர், ஓடாநிலையில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலைக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆடி 18 அன்று விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரின் பிறந்த நாளான ஏப்ரல் 17ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாப்பட்டு வருகிறது.


அந்த வகையில், இன்று (ஏப்ரல் 17) சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அறச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ப.ரவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
why is ai important to the future