ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்: ஈரோடு ஆட்சியர் தகவல்
தாட்கோ மூலம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி.
ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக முன்னனி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வில் (Preliminary exam) தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு (Main) தேர்ச்சி பெற விரும்பும் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு என்ற முகவரியில், என்ற 0424-2259453 தொலைபேசி எண்ணிலும் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu