பெருந்துறையில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு

பெருந்துறையில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு
X

பெருந்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கள ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

உங்களைத் தேடி,உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பெருந்துறை வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா இன்று (டிச.24) கள ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, பெருந்துறை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சை மையத்தினை பார்வையிட்டு, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் உள்ள ஆண், பெண் வார்டுகள் மற்றும் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, சீனாபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை இணைய வசதி மூலமாக விரைந்து வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார். பின்னர், நமுட்டிபாளையத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதில் கிராம நகலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இதைத் தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சீனாபுரம் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை, கோதுமை, அரிசி, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களிடம் அத்தியாவசிய பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார்.


மேலும், சீனாபுரம் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு அங்கன்வாடி மையத்திற்கு வருகை புரியும் குழந்தைகளின் எண்ணிக்கை, எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் விவரங்கள் உள்ளிட்டவைகளை கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருவதையும், ஓட்டுநர் தேர்வு தளத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களிடம் அங்கு பயிற்சி பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை குறித்தும் அடிப்படை வசதிகள் ஏதேனும் தேவை உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, பெருந்துறை தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தினை பார்வையிட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் தீயணைப்பு வாகனத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, பெருந்துறையில் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கினை பார்வையிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வரும் விவரங்களை குறித்து கேட்டறிந்து, அங்கு செயல்பட்டு வரும் குளிர் பதன கிடங்கினையும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பெருந்துறை கிடங்கினை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதையும், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்துறை கிளையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் வட்டாட்சியர் செல்வகுமார், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் அன்புராஜ், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ஈரோடு சரகம் காலிதாபானு, அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
கொடுமுடி பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
பெருந்துறையில் பொதுமக்களிடம் இருந்து 326 கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஈரோடு ஆட்சியர்
கோபி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.26) பல்வேறு இடங்களில்  மின்தடை அறிவிப்பு
அந்தியூரில் மானியத்தில் கடன் வாங்கி கொடுப்பதாக 217 பவுன் நகை, ரூ.89 லட்சம் மோசடி: தொழிலாளி கைது
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!
செங்குந்தா் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு – கௌரவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்!
மூத்த குடிமக்களுக்கு மரியாதை: பவானிசாகர் அருகே பென்சனர்கள் தினம்!
மல்லிகை பூ விலை ஏறியது: சத்தியமங்கலத்தில் கிலோ ரூ.2740!
கொல்லிமலை நாச்சியம்மன் கோயிலின் முக்கியத்துவம் – அம்மன் தரிசனத்துடன் சுறுசுறுப்பான அனுபவம்
அந்தியூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
குடிநீர் இணைப்பு வழங்க ஈரோடு கலெக்டர் ஆபீஸில் கோரிக்கை..!
கொடுமுடி பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம்
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!