போகிப் பண்டிகை: காற்றின் தரத்தை பாதுக்காக்க ஈரோடு ஆட்சியர் வேண்டுகோள்!

போகிப் பண்டிகை: காற்றின் தரத்தை பாதுக்காக்க ஈரோடு ஆட்சியர் வேண்டுகோள்!
X

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்திட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு ஈரோடு மாவட்ட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்திட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு ஈரோடு மாவட்ட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் போகி பண்டிகையின் போது வீட்டில் உள்ள தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

இதனால், வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் மற்றும் நுரையீரல் கோளாறு போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும் புகை மூட்டத்தினால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், டியூப், காகிதம் மற்றும் இரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைத்து புகையில்லா போகி கொண்டாடி சுற்றுச் சூழலை பேணிக் காப்போம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!