ஈரோடு பஸ் நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

ஈரோடு பஸ் நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட சந்தோஷ். 

ஈரோடு மணிக்கூண்டு, பஸ் நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் ஈரோட்டில் பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் குண்டு வைத்துள்ளதாகவும் இந்த மூன்று இடங்களிலும் குண்டு வெடிக்கும் என்று கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து சென்னை போலீசார் ஈரோடு எஸ். பி. அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார் படுத்தினர். இதையடுத்து போலீசை ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் ஈரோடு ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஒவ்வொரு நடைமேடை, ரயிலிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்தே போலீசார் நிம்மதி அடைந்தனர்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் பேசிய போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த போன் நம்பர் வைத்து அந்த நபர் இருக்கும் இடத்தை டவுன் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மேட்டுப்பாளையத்தை சந்தோஷ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். சந்தோஷ் தனது மனைவியை பிரிந்து சற்று மனநலம் பாதித்தவர் போல் இருந்துள்ளார்.

ஏற்கனவே சந்தோஷ் இதேபோல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும், ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இரண்டு முறை போன் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக ஈரோடு சூரம்பட்டி, மற்றும் ரயில்வே போலீஸ் நிலையத்தில் சந்தோஷ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சந்தோஷ் கைதாகியுள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா