உலக சேமிப்பு தினம்: ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் டெபாசிட் சேகரிப்பு முகாம்
முகாமினை துவக்கி வைத்த வீட்டுவசத்துறை அமைச்சர் முத்துசாமி.
உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு, டெபாசிட் சேகரிப்பு மற்றும் நிதியியல் கல்வி விழிப்புணர்வு முகாம் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். முகாமினை வீட்டுவசத்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரூ.32.26 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
முகாமில் சேமிப்பதன் அவசியம், பாதுகாப்பான முதலீடு, தவணை தேதியில் கடனை திருப்பி செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள், மத்திய அரசின் விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள், ஏடிஎம் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துதல், ரொக்கம் இல்லா பணப்பரிவர்த்தனை, அரசு நலத்திட்டங்கள், ரூபே கிஷான் கார்டு, விவசாயம் மற்றும் இதர கடன்கள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
முகாமினையொட்டி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 5 நபர்களும், சம்பத் நகர் கிளையில் 3 நபர்களும் என மொத்தம் 20 நபர்கள் ரூ.1.4 கோடி மதிப்பீட்டில் வங்கியில் நிரந்த டெபாசிட் செய்தனர். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் செல்வராஜ் எம்பி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணிகந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu