தவறான நிர்வாகத்தால் மனைவி உயிரிழப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் மனு

தவறான நிர்வாகத்தால் மனைவி உயிரிழப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் மனு
X

அகில இந்திய நாடார் சமுதாயம் சார்பில் மனு கொடுக்க வந்தவர்கள்.

தனியார் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் தன் மனைவி இறந்து போனதாக ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் மனு அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த காந்தி என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

கடந்த 25.12.21 அன்று எனது மனைவி காயத்ரியை மருத்துவ பரிசோதனைக்காக (டயாலிலிஸ்) பெருந்துறை சாலையில் உள்ள சுதா மருத்துவமனையில் அனுமதித்தேன். அப்போது மருத்துவமனையின் ஏர் கன்டிஷனர் குளிர் தாங்காமல் என் மனைவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடனடியாக ஆக்சிசன் தேவைப்பட்டது. மருத்துவமனையில் ஆக்சிசன் பற்றாக்குறையால் என் மனைவி மருத்துவமனையில் சேர்த்த ஒரு மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நான் இதுகுறித்து நிர்வாகத்திடம் கேள்வி எழுப்புகையில் மருத்துவர் நாகேந்திரன் கார்டியாக் அரெஸ்ட் மூலம் எனது மனைவி இறந்ததாகவும் அதில் தவறு ஏதும் இல்லை எனவும் கூறினார். மனைவியின் இறப்பை நேரில் பார்த்த என்னிடம் மருத்துவமனையின் அனைத்து தவறுகளையும் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும் மறைத்தனர்.

இதில் சுதா மருத்துவமனைக்கு உதவ பிஜேபியின் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தவறு நடந்து விட்டது, இழப்பீடு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இருப்பினும் இரு மாதங்களாகியும் இழப்பீடு வழங்கவில்லை. தற்போது சட்டப்படி பார்த்துக்கொள்ளுங்கள் என்கின்றனர் என மனுவில் கூறியுள்ளார்.

மேற்கண்டவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்தவரின் கணவர் மற்றும் அவர் சார்ந்த அகில இந்திய நாடார் சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!