மாணவர்களின் மனதைக் கவர சுவரில் ஓவியம் வரைந்த பள்ளி ஆசிரியர்கள்
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் ஆரம்பப் பள்ளிகள் துவங்கப்பட உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு ஓவியமாக சுவர்களில் வரைந்து மாணவர்களை ஈர்க்க தயாராகி உள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. தற்போது தமிழகத்தில் நோய் தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு செல்ல பாட்சா வீதியில் உள்ள அப்துல் கனி மதரஸா எனும் பெயர் கொண்ட அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி 80 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 800 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பல மாதங்கள் பூட்டிக்கிடந்த பள்ளியை பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் இணைந்து பாட வாரியாக பள்ளி வகுப்பு சுவர், பொதுச் சுவர், படிக்கட்டு, கைப்பிடி, தண்ணீர் தொட்டி என அனைத்து இடங்களிலும் பாடப் புத்தகங்களின் படக்காட்சிகளை தத்ரூபமாக வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu