ஈரோட்டில் தீபாவளி விற்பனையில் களைகட்டும் புதுவரவுகள்

புதுவரவு சேலைகள்.
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் தற்போது வழக்கத்தை விட அதிகமாக மக்கள் கூட்டம் உள்ளது.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோவில் வீதி போன்ற பகுதிகளில் ஏராளமான ஜவுளி கடைகள் உள்ளன. மேலும் கனி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் அண்டை மாவட்டங்களான சேலம், நாமக்கல், திருப்பூர் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஈரோட்டிற்கு ஜவுளிகள் வாங்க குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக ஆர்கேவி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, கடை வீதிகள் மற்றும் கனி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதுடன், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளிகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
அதே நேரத்தில் ஈரோடு மாவட்டம் உட்பட தமிழகம் மற்றும் குஜராத், சூரத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் உற்பத்தியான, தமிழக இளம் பெண்கள் & கல்லூரி மாணவிகள் விரும்பும் வகையில், இந்த தீபாவளிக்கான புதிய வரவாக இதுவரை உற்பத்தி செய்யப்படாத, ( கொரோனாவிற்கு பிறகு ) டஸ்சர் எம்பிராய்டரி வொர்க் என்ற புதிய தொழில்நுட்பத்தில் உருவான லினன் ஆன்ட்டிக் சேலைகள், பெண்கள் விரும்பும் பட்டுச்சேலையை போல், வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட மிகவும் மென்மையான சாப்டி சாரீஸ், சாஃப்ட் சில்க், லினன் டிஸ்யூ, ஆன்ட்டிக் பனாரஸ் என பல வண்ணமயமான சில்க் சேலைகள் பெண்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
அதேபோல் பனாரஸ் டிஜிட்டல் பிரிண்ட் என்ற புதிய வகை சேலையும் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு வரை இந்த வகை சேலை ப்ளைன் ஷேரியாக மட்டுமே மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருந்தது. இந்த முறை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூக்கள், ஓவியங்கள் என புதிய வடிவமைப்பாக, டிஜிட்டல் பிரிண்ட் செய்து புதிய வரவாக வந்துள்ளதை பெண்கள் விரும்புவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் கல்லூரி மாணவிகள் விரும்பும் மிகப்பிரம்மாண்டமாக ஆரி ஒர்க் செய்த பிரைடல் லெஹங்காக்கள் இந்த ஆண்டு பெண்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu