வெண்டிபாளையம் புதிய நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கி சிதிலம்
வெண்டிபாளையத்தில் உள்ள புதிய நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
ஈரோடு, வெண்டிபாளையம் பகுதியில், 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, ரயில்வே கடவு பாதை இருந்து வந்தது. 2018 ஆம் ஆண்டு, பல லட்சம் மதிப்பிலான ரயில்வே நுழைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் நடைபெற்று வந்த ரயில்வே நுழைவு பாலம் பணி, தற்போதும் முழுமை பெறாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனிடையே, ரயில்வே நிர்வாகம் இந்த நுழைவு பாலத்தை 2021 மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விட்டது. எனினும் மழைக்காலம் துவங்கி விட்டதால், ரயில்வே நுழைவு பாலத்திற்குள் ஆளுயர தண்ணீர் தேங்கி நிற்பதால் நுழைவு பாலததை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் நுழைவு பாலத்தின் பணியை இன்று வரை சரி வர முடிக்கப்படாத நிலையில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக ரயில்வே நிர்வாகம் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தது.
தண்ணீர் தேங்கி இருப்பதால், நுழைவு பாலத்தில் ஆங்காங்கே சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டு தண்ணீர் கொட்டத் துவங்கியுள்ளது. எனவே ரயில்வே நுழைவு பாலத்தின் முழுமையாக சீரமைத்து, தண்ணீர் தேங்காத அளவிற்கு வடிகால் குழாய் அமைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu