லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்:  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
X

மொடக்குறிச்சியில் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் செய்து மனு வழங்கினர்

சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம் அடுத்து மொடக்குறிச்சி கனகபுரம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கிராம நிர்வாக அலுவலராக பரிமளம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சான்றிதழ் கேட்டு வரும் பொதுமக்களிடம் பணம் கேட்டு வருகிறார் எனவும், பணம் தருபவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கி வருகிறார் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டு வரும் விஏஓ-வை பணிமாறுதல் செய்ய வேண்டும் எனவும், அவருக்கு இத்தகைய செயல்களில் உறுதுணையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விஏஓ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!