ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்கள் வாகனம் பறிமுதல்

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாதவர்கள் வாகனம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்த 100க்கும் மேற்பட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணியவேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலானோர் தலைகவசம் அணிவதில்லை.

இருசக்கர வாகனங்களில் செல்லும்போது சாலையில் நிகழும் விபத்துகளில் உயிரிழப்பவர்கள் தலைகவசம் அணியாததே காரணமாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் என இருவரும் கட்டாயம் தலைகவசம் அணியவேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்மூலம் விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பெரும் பாதிப்பை தவிர்க்கவே கட்டாயமாக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஹெல்மெட் காண்பித்த பிறகு வாகனத்தை திருப்பி ஒப்படைத்து வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!