தொடர் மழையால் வரத்து குறைவு: ஈரோட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

தொடர் மழையால் வரத்து குறைவு: ஈரோட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழையால் வரத்து குறைந்து, காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் குறைந்து விட்டது. இதன் காரணமாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. . இதனால் அவற்றின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 13-ந்தேதி ரூ.80-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி ரூ.20 விலை உயர்ந்து, ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.80-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ.120-க்கும், ரூ.70-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை கிலோவில் வருமாறு: தக்காளி-ரூ.100, கத்தரிக்காய் - ரூ.120, வெண்டைக்காய் - ரூ.70, பீர்க்கங்காய் - ரூ.60, புடலங்காய் - ரூ.60, முள்ளங்கி - ரூ.50, கேரட் - ரூ.60, பீட்ரூட் -ரூ.40, கருப்பு அவரைக்காய் - ரூ.130, பெல்ட் அவரைக்காய் - ரூ.100, முருங்கைக்காய் - ரூ.150, பச்சை மிளகாய் - ரூ.40, காலிபிளவர் - ரூ.60, உருளைக்கிழங்கு - ரூ.40. வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture