/* */

சங்க தேர்தலை நடத்தக்கோரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு

சங்க தேர்தலை நடத்தக்கோரி ஈரோட்டில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

சங்க தேர்தலை நடத்தக்கோரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு
X

கடைகள் அடைக்கப்பட்டுள்ள ஈரோடு மார்க்கெட்.

ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் சங்கம் உருவாக்கி அதில் 807 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக சங்க தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதாகவும், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வியாபாரிகளில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே சங்க நிர்வாகிகளுக்கு வீட்டுமனை நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வியாபாரியிடமும் ரூ.70 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் வழங்கப்படாமல் உள்ளதால், நிலம் வழங்கும் வரை தற்போதைய நிர்வாகிகளே தொடர வேண்டும் என்று ஒரு பிரிவு வியாபாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் வியாபாரிகளிடையே குழப்பமான நிலை இருந்து வருகின்றது.

இந்நிலையில் சங்க தேர்தலை நடத்த வேண்டும், சுங்க கட்டணம் வசூல் முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகளில் ஒரு பிரிவினர் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்கெட்டில் மொத்தமுள்ள 807 கடைகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இரு பிரிவுகளாக வியாபாரிகள் உள்ளதால் கடையடைப்பு போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மார்க்கெட் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் தேர்தலை நடத்த வலியுறுத்தி காய்கறி மார்க்கெட் வியாபார சங்கத்தின் ஒரு தரப்பினர் இன்று மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

Updated On: 8 Oct 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  8. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  9. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  10. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா