மின்வாரிய ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வி.சி.க-வினர் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வி.சி.க-வினர் ஆர்ப்பாட்டம்
X

 ஈரோட்டில் ஆர்ப்பாட்டதத்தில் ஈடுபட்ட வி.சி.கட்சியினர்.

மின்வாரியத்தில் பணியாற்றும் பணி நியமனம் வழங்காத 5 ஆயிரம் பேருக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும்.

ஈரோடு ஈவிஎன் ரோட்டில் உள்ள தலைமை மின் பொறியாளர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மின்வாரிய அலுவலர் தொழிலாளர் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கோபி திட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மண்ட துணை செயலாளர் காளியப்பன், பொறுப்பாளர் ஜெயன், கோபி திட்ட தலைவர் பஞ்சயன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் பகுத்தறிவன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், பொறியாளர் அணி மாநில செயலாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மின் வாரியத்தில் கேங்மேன் தொழிலாளர்களின் பணிக்காலத்தை ஓராண்டாக குறைக்க வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களுக்கான பணியை முறைப்படுத்திட வேண்டும். பணி நியமனம் வழங்காத 5ஆயிரம் பேருக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு திட்ட செயலாளர் ரங்கதுரை, மாவட்ட பொருளாளர் மிசா தங்கவேல், நிர்வாகிகள் பால்ராஜ், குணவளவன், சண்முகம், சந்திரகுமார், விஜயன், தமிழ்நிலா, நாகைரசன், நித்தியானந்தன், முருகேசன், அழகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!