ஜெய் பீம் படக்குழுவினர் மீது ஈரோடு நீதிமன்றத்தில் வன்னியர் சங்கம் வழக்கு

ஜெய் பீம் படக்குழுவினர் மீது ஈரோடு நீதிமன்றத்தில் வன்னியர் சங்கம் வழக்கு
X

நீதிமன்றத்தில் குவிந்த பாமகவினர்.

ஈரோடு நீதிமன்றத்தில் ஜெய் பீம் பட நிறுவனத்தின் மீது வன்னியர் சங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியதாகக் கூறி தமிழகம் முழுவதும் பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படக்குழுவினர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநகர செயலாளர் எஸ் ஆர் ராஜா தலைமையில், வன்னியர் சங்கத்தின் அடையாளமான அக்னி கலசத்தை கேவலப்படுத்தும் வகையில் நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர்களான சூர்யா ஜோதிகா மற்றும் அதன் டைரக்டர் ஞானவேல் ஆகியோர்கள் மீது ஈரோடு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட கோரி புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் எவ்வித முதல் தகவல் அறிக்கையும் இதுவரை பதிவு செய்யப்பட வில்லை. இதனை அடுத்து இன்று ஈரோடு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 200 cr.pc படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு உத்தரவிட வேண்டி மனு தாக்கல் செய்தனர்.

இதில் வழக்கறிஞர் மகேந்திரன் சிதம்பரம் 2ம் எண் மாஜிஸ்திரேட் கோர்டில் ஜெய் பீம் படக்குழுவினர்களான 2டி நிறுவனம்,நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவவை அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் சக்திவேல் வரும் 25ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!