கடத்தப்பட்ட பேரனை மீட்க வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

கடத்தப்பட்ட பேரனை மீட்க வலியுறுத்தி  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
X

கடத்தப்பட்ட பேரனை மீட்க வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வயதான தம்பதியினர்

கடத்தப்பட்ட பேரனை மீட்க வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிஆர்ஓ முருகேசன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகளை மனுவாக வழங்கினர். அப்போது சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, பொன்னகர் திருமால் நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தனது மனைவியுடன் வந்திருந்தார். திடீரென அவர் தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்து பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் நடராஜன் தனது மனைவியுடன் டிஆர்ஓ முருகேசனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2018ஆம் வருடம் மார்ச் 11ஆம் தேதி ஐய்யம்புத்தூரில் நடந்த சாலை விபத்தில் எனது மகனும் மருமகளும் இறந்துவிட்டனர். இந்த விபத்தில் எனது பேரன் கதிஷன் படுகாயமடைந்து இரண்டு கால்கள் மற்றும் முதுகெலும்பு உடைந்தது. பல்வேறு இடங்களில் எனது பெயர் எனக்கு சிகிச்சை செய்தும் குணமாகவில்லை இதனையடுத்து கடந்த மூன்று வருடமாக கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது பேரனுக்கு சிகிச்சை எடுத்து வருகிறோம் இதனால் தற்போது அவன் சற்று குணமடைந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 17ஆம் தேதி தனது சம்பந்தி மற்றும் அவரது உறவினர்கள் எனது பேரனை கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து நாங்கள் கோயம்புத்தூரில் உள்ள கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. கோவை ,சேலம் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தோம். அப்போது எனது சம்பந்தி வீட்டார் பேரனை எங்களிடம் கொடுத்து விடுவதாக கூறினர். ஆனால் இன்றுவரை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

எங்கள் மகன் மற்றும் மருமகள் சாலை விபத்தில் இறந்து போனதற்கு பணம் வரும் என்பதால் எனது பேரக் குழந்தையை பணத்திற்காக அவர்கள் கடத்தி வைத்துள்ளார்கள். தற்போது எனது பேரன் கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறான். 10 வயது வரை அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இப்போது அவன் அங்கு உள்ளான் அவனுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. நாங்கள் எனது பேரனை சென்று பார்க்க முடியவில்லை. போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவனது எதிர்காலம் என்னவாகும் என்று கூட தெரியவில்லை நாங்க மனவேதனையில் உள்ளோம். ஆகவே தாங்கள் எங்களது பேரனை எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பேரனை கடத்திய சம்பந்தி வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!