ஏற்றுமதி தேவை அதிகரிப்பால் மஞ்சள் விலை உயர்வு: ஈரோடு விவசாயிகள் மகிழ்ச்சி

ஏற்றுமதி தேவை அதிகரிப்பால் மஞ்சள் விலை உயர்வு: ஈரோடு விவசாயிகள் மகிழ்ச்சி
X

ஏற்றுமதி, தேவை அதிகரிப்பால்

மஞ்சல் விலை உயர்ந்துள்ளது

தமிழகம் கேரளாவில் பொங்கலுக்கு அரசு சார்பில் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக மஞ்சளை கொள்முதல் செய்துள்ளன

ஏற்றுமதி, தேவை அதிகரிப்பால் மஞ்சல் விலை உயர்ந்துள்ளதால் மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிக அளவிலான மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஈரோட்டில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மஞ்சள் நிறம் நடந்து வருகிறது. ஈரோட்டில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 7,500 ஆயிரம் வரையும், கிழங்கு மஞ்சள் ரூ. 5,400 முதல் 7 ஆயிரம் விற்பனையானது. தீபாவளிக்குப் பின் படிப்படியாக மஞ்சள் விலை ரூ. 2,000 வரை உயர்ந்துள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: தீபாவளி வரை மஞ்சள் விலை குறையாததால் வியாபாரிகள் அதிகமாக மஞ்சளை இருப்பு வைத்திருந்தனர். கடந்தாண்டு போலவே நவம்பர், டிசம்பர் மாதங்களில் மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தமிழகம் கேரளாவில் பொங்கலுக்கு அரசு சார்பில் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக மஞ்சளை கொள்முதல் செய்துள்ளனர்.

தேசிய அளவில் மஞ்சளின் தேவையும் அதிகரித்துள்ளது.தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத், மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா உட்பட வட மாநிலங்களில் தொடர் மழையால் 40 சதவீதம் மஞ்சள் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலை வேலூர் அரூர் போன்ற பகுதியில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த அறுவடை குறையும். ஈரோடு உள்பட தமிழகத்தில் ஜனவரி 15-ஆம் தேதிக்குள் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கும். புதிய மஞ்சள் வரும்போது பழைய மஞ்சளுக்கு விலை குறையும் என்பதால் வியாபாரிகளிடம் இருப்பிலுள்ள மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனால் தீபாவளிக்கு பின் படிப்படியாக விலை கூடி ரூ.2000 வரை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி குவிண்டால் ரூ.7089 முதல் 9,219 ரூபாய்க்கும், கிழங்கு 6,750 முதல் 8,314 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் விரலி குவிண்டால் விலை அதிகரித்துள்ளது. பொதுவாக தேசிய அளவில் மஞ்சள் உற்பத்தியில் தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் 65 சதவீதமும் , தமிழகம் உள்பட பிற பகுதியில் 35 சதவீதம் உற்பத்தி உள்ளது. தற்போது வட மாநிலங்களில் மழையால் மஞ்சள் பயிர் பாதித்துள்ளதால் வரும் நாட்களில் இன்னும் விலை உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!