அடர் வனம் அமைக்கும் பணி: மரக்கன்று நட்டு தொடங்கிவைத்த எம்எல்ஏ ஈவெரா

அடர் வனம் அமைக்கும் பணி: மரக்கன்று நட்டு தொடங்கிவைத்த எம்எல்ஏ ஈவெரா
X

ஈரோட்டில், மரக்கன்று நட்டு அடர்வனம் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா. 

ஈரோட்டில், அடர்வனம் அமைக்கும் பணியை, மரக்கன்று நட்டு, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடர் வனம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அடர்வனம் அமைக்கும் பணிகளை, மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். அத்துடன், பள்ளியில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ., மாணவிகள் மிதிவண்டி நிறுத்துமிடத்தை மேம்படுத்துதல், அங்கன்வாடி மையத்தை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆய்வின் போது, காங்கிரஸ் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ரவி, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மண்டலத் தலைவர் விஜயபாஸ்கர், திருச்செல்வம், முன்னாள் மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் செந்தில் ராஜா, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயகண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!