இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும், மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும், மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி
X

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும், மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் தளர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை போக்க இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் முன்னோட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தில் பங்கேற்கும் கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி ஈரோடு பன்னீர்செல்வம் பார்ப்பதில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குழந்தை திருமணம் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்தல், கல்வியின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் நாடகங்களுடன் கலைக்குழுவினர் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதைத் தொடர்ந்து கல்வியாளர்களுக்கு பயிற்சி தொடங்கியது.

முன்னதாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது அதில் நமது மாவட்டமும் ஒன்று. இதனைத் தொடர்ந்து இன்று நமது மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்வியாளர்கள் பயிற்சிகளை வழங்கினர். பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு , மாவட்ட, ஒன்றிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம், மாணவர்களின் மன அழுத்தம் நீங்கி கற்றல் திறன் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil