பாதாள சாக்கடை இணைப்பு குறித்து திருமகன் எம்எல்ஏ ஆய்வு

பாதாள சாக்கடை இணைப்பு குறித்து  திருமகன் எம்எல்ஏ ஆய்வு
X

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா எம்எல்ஏ பாதாள சாக்கடையை ஆய்வு செய்தார். 

ஈரோடு கிழக்கு எம்எல்ஏ திருமகன் ஈவெரா பாதாள சாக்கடை இணைப்பு குறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா எம்எல்ஏ பாதாள சாக்கடை இணைப்பு குறித்த பிரச்சினைகளை நேரில் சென்று மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், வீரப்பம்பாளையம் பகுதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமையலறை பழுதடைந்து உள்ளதையும், பள்ளியைச் சுற்றியுள்ள புதர்களையும் சீரமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் கரட்டாங்காடு குடிசைப் பகுதிகளில் பொதுக்கழிப்பிடம் மேம்படுத்துதல், சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் கோல்டன் சிட்டி, யுஆர்சி நகர்பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணி, மழை நீர் தேங்குவது குறித்த பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உண்டான கருத்துக்களை, அதிகாரியிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது திமுகவைச் சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் வீனஸ் பழனிசாமி, 32வது வார்டு கழக உறுப்பினர்கள். குடியிருப்போர் நல சங்கத்தினரும், மாநகராட்சி உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!