அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு: அழகுபட்டு மாரியம்மன் கோவிலில் வினோதம்

அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு: அழகுபட்டு மாரியம்மன் கோவிலில் வினோதம்
X

கருங்கல்பாளையம் பட்டுமாரியம்மன் கோவிலில், அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு அளித்த பூசாரி.

கருங்கல்பாளையம் அழகு பட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவில், அரிவாள் மீது நடந்து பூசாரி அருள்வாக்கு அளித்தார்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அழகு பட்டு மாரியம்மன் கோவில். இக்கோவில் 70 ஆண்டு கால வரலாற்று சிறப்புமிக்கது. இங்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக, கொரோனா விதிமுறைகள் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த ஆண்டு திருவிழாவை முன்னிடு, செங்குட்டுவன் நகர் மக்களால், கடந்த 4 ம் தேதி கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து, நேற்று கோவிலில் முக்கிய விழாவான தீர்த்தம் எடுத்தல், அலகு குத்தி நடனம் ஆடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழா முடிவில், கோவிலின் தலைமை பூசாரி ஜோதிமணி அரிவாளுடன் நடந்தபடியே கோவிலை சுற்றி வந்தார். தொடர்ந்து வரிசையில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும்வெந்நீர் பானையின் மீது கால் ஊன்றி நடந்தும், அரிவாள் மீது நின்றும், அருள் வாக்கு அளித்தார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் ஏராளமானோர், கோவில் முன்பாக குவிந்து, பூசாரி ஜோதிமணியிடம் அருள் வாக்கு பெற்று சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!