டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, கள் கடைகளை திறக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்
கண்டன ஆர்ப்பாட்டதத்தில் கலந்து கொண்ட அர்ஜுன் சம்பத்.
இந்து மக்கள் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப அமல்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் அர்ஜுன் சம்பத்தின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டாஸ்மாக் கடையை மூடிவிட்டு அதற்கு பதிலாக கள்ளுக்கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி வங்கி கணக்கிலும் ரூ. 6 ஆயிரம் பிரதமர் மோடி வரவு வைத்துள்ளார். அதேபோல் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு அடிக்கடி காரணமாகவே 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு மீண்டும் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். ஜனவரி 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து, கள் இறக்கும் போராட்டத்தில் பங்கேற்கும்.
வேளாண் சட்டத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் இன்று தொடங்கப்படுகிறது. 7 பேர் விடுதலையில் தமிழக அரசு ஆளுநர் மீது பழி போடாமல் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி பெட்ரோல் , டீசல் வரியை ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu