மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம். 

சூரம்பட்டி நால்ரோடு சந்திப்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த பாரதிய ஜனதாவின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் பாஜக குண்டர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது சிறையில் அடைக்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகளை கொலை செய்த பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் போராட்டக் குழு மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்றது. இந்தப் படுகொலையை கண்டித்தும், இந்த படுகொலையை நிகழ்த்திய பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோசங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!